சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தேக்கடி சுற்றுலா மீண்டும் நாளை முதல் திறப்பு..!!

Author: Aarthi Sivakumar
8 August 2021, 9:20 am
Quick Share

தேக்கடி: கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த தேக்கடி சுற்றுலா தலம் மூன்று மாதத்துக்கு பின் நாளை திறக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்று. இங்கு யானை சவாரி, மலையேற்றம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.

latest tamil news

எப்போதும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக இருக்கும். கொரோனா காரணமாக ஏப்ரல் 27ம் தேதி தேக்கடி சுற்றுலா தலம் மூடப்பட்டது. கேரள சுற்றுலாத்துறை, வனத்துறை சார்பில் படகு சவாரி, யானை சவாரி உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டன.

தற்போது கோவிட் பாதிப்பு சற்று குறைந்து உள்ளதால் மூன்று மாதத்திற்குப்பின் நாளை முதல் தேக்கடியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. படகு சவாரி உள்ளிட்ட வனப்பகுதி சுற்றுலா அனைத்தும் துவக்கப்படுகின்றன.

Views: - 540

0

0