தேனி அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் இளைஞர் பலி..!!
7 February 2021, 3:04 pmதேனி: அய்யம்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் சின்னமனூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆவேசமாக காளைகளை அடக்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு காளை முருகேசனின் மார்பு மற்றும் தொண்டையில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போட்டியை காண வந்த காளீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
0
0