போக்கியத்தால் முளைத்த அயோக்கிய தம்பதி..!! (வீடியோ)

14 February 2020, 7:38 pm
Theni Murder - updatenews360
Quick Share

தேனி : கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டது குறித்து கணவன் மனைவியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(45). முந்திரி வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கருமாரிபுரம் பகுதியில் முருகன்(50) என்பவருக்கு செந்தமான வீட்டில் ஒத்திக்கு குடி இருந்துள்ளார்.

கடந்த 3 மாதத்திற்கு முன்பாக வீட்டின் ஒத்தி காலம் முடிந்து வேறு ஒரு வீட்டிற்கு குடிபேவதற்காக வீடு பார்த்து வந்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் முருகனிடம் தொடர்ந்து வீட்டிற்கு ஒத்திக்கு கொடுத்தா பணத்தினை திரும்பத் தருமாறு கேட்டு வந்துள்ளார்.

ஆனால் முருகன் அதை கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவக்குமாருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அவரது மனைவியான செல்வராணியின் தாயார் வீட்டில் இருந்து வந்துள்ளனர். சிவகுமார் மட்டும் அதை வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே ஒத்தி பணத்தை முருகனிடம் கேட்டதாகவும் இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் முருகன் மற்றும் அவரது மனைவி பவுன் தாய் ஆகியோர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிவகுமாரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் சரிந்து விழுந்து பலியானர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த ராயப்பன்பட்டி காவல் துறையினர் உடனடியாக விரைந்து வந்து இறந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் மற்றும் அவரது மனைவி பவுன்தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சண்டையின்போது காயமடைந்தா முருகன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.