தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி : தனிவார்டில் அனுமதி
21 January 2021, 2:28 pmதேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் சராசரி 500 ஆக குறைந்துள்ளது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்புகளே பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0
0