அரசு பேருந்தில் ஆள் இறங்குமளவிற்கு பெரிய ஓட்டை… ஆபத்தோடு பயணிக்கும் பயணிகள் : போக்குவரத்துத்துறையில் அலட்சியமா..?

Author: Babu Lakshmanan
17 November 2021, 11:12 am
theni bus - updatenews360
Quick Share

தேனி அருகே இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து ஒன்றில் ஆள் இறங்குமளவுக்கு ஓட்டை இருந்தும், அந்தப் பேருந்து தொடர்ந்து இயக்கப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் இருந்து சுப்பலாபுரத்திற்கு தினமும் 12 முறை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தின் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இப்படி, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த அரசு பேருந்தில், ஒரு ஆள் இறங்குமளவிற்கு தரைப்பகுதியில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் பழுதடைந்த பேருந்துகளை மாற்றிவிட்டு, நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இவ்வளவு பெரிய ஓட்டை இருந்தும், அதனை சரி செய்யாமல், அப்படியே இயக்குவது ஏன்..? என்ற கேள்வியுடன், பட்ஜெட்டில் போக்குவரத்துத்துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பேருந்துகள் முறையாகப் பராமரிக்காதது ஏன்..? என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஹாரன், பிரேக் மற்றும் மீட்டர் பாக்ஸ் உள்ளிட்டவை ஏதும் வேலை செய்யாத நிலையில், அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருவதை ஓட்டுநரே வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தேனியில் மற்றுமொரு பேருந்தின் அவல நிலை வெளிவந்திருப்பது, அரசுப் பேருந்துகளின் மீது பொதுமக்களுக்கான நம்பகத்தன்மை கெட்டுப்போகியுள்ளது.

எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு அரசுப் பேருந்துகளின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Views: - 314

0

0