வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு : வனப்பகுதியில் நக்சல் தடுப்பு காவல்துறையினர் சோதனை

8 July 2021, 8:56 pm
Quick Share

தேனி: கம்பம் வனப்பகுதியில் வனதுறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது நக்சலைட்டுகளா என சந்தேகம் எழுந்துள்ளதால் தமிழக கேரள எல்கையில் நக்சல் தடுப்பு காவல்துறையினர் வனப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள செல்லார்கோவில் மெட்டு பகுதியில் கடந்த 30ஆம் தேதி இரவில் வனத்துறையினரின் ரோந்து சென்ற போது 7 நபர்கள் வனப்பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், வனத்துறையினரை பார்த்தவுடன் துப்பாக்கியால் சுட்டதில் யாரும் காயம் அடையத நிலையில் வனத்துறையினர் தொடர்ந்து பதுங்கி இருந்த கும்பலை துரத்திச் சென்றனர். இந்நிலையில் அந்த கும்பலால் வனக்காவலர் காஜாமைதீனை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில், தப்பி ஓடிய கும்பம் பதுங்கி இருந்த இடத்தில் பயங்கர ஆயுதங்கள், நாட்டுத் துப்பாக்கியின் பாகங்கள், மற்றும் மான் கொம்பு ஆகியவற்றை வனத்து வனத்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

எனவே வனத்துறையினரை தாக்கிய நபர்கள் வத்துறையினர் தேடி வரும்நிலையில், நக்சலைட்டுகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் இன்று பெரியகுளம் அருகே உள்ள அகமலைக்கு மேல் உள்ள கேரள மாநில எல்கை வனப்பகுதிகளில் சந்தேகிக்கும் படியான ஆட்கள் நடமாட்டம் உள்ளதா, வனத்துறையினரை தாக்கியவர்கள் ஏதும் பதுங்கி உள்ளனரா என சோதனை செய்வதற்காக 45 நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மாநில எல்கையின் அடர் வனப்பகுதிக்கு சென்று 3 குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட இன்று சென்றுள்ளனர். மேலும் இது குறித்து நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் கேட்ட போது மாநில எல்கையில் உள்ள வனப்பகுதிகள் வழக்கமான சோதனை பணி என தெரிவித்துள்ளார்.

Views: - 149

0

0