CM ஸ்டாலின் போல மோசமான ஒரு தலைவர் எங்குமே இல்லை.. லஞ்சத்தில் ஊறிக்கொண்டிருக்கிறது திமுக அரசு : எஸ்பி வேலுமணி கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 3:58 pm
SP Velumani Speech - Updatenews360
Quick Share

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு தாலுகா தாசில்தார் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் ஜி அருண்குமார், கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே .அர்ஜுனன், கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே செல்வராஜ், கழக அமைப்புச் செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ. தாமோதரன், முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர் ஜெயராம், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி கந்தசாமி, மற்றும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அதேபோல கோவை மாநகர காவல் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண் குமார் பேசும் போது, திட்டங்களை கொடுத்தது அம்மாவின் ஆட்சி. எம்பி தேர்தல் வர போகிறது.மக்கள் திமுகவினரை அடித்து துரத்த உள்ளனர் என்றார்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசும்போது. எழுச்சியான போராட்டம் நடைபெற்று வருகிறது.இது விளம்பர அரசு, விடியா அரசு. அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றவில்லை.

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது. இந்த ஆட்சியில் குடிநீர் வரியும் அதிகப்படுத்தி உள்ளனர். தற்போது கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொத்து கொத்தாக உயிர் பலியாகியது.

மின் கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 53% ஆக அதிகப்படுத்தி உள்ளது இந்த திமுக அரசு. திமுக அரசின் கவலை பணத்தை அடிப்பது தான். அதிமுக ஆட்சியை நாங்கள் காப்பாற்றியதால் ஸ்டாலினுக்கு கோபம். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்தார் அது நடக்கவில்லை.ஆகவே அப்பவே ஸ்டாலின் கோவைக்கு வந்த போது என்னை விட மாட்டேன் என தெரிவித்து சென்றார்.


திமுக குடும்பம் என்றைக்குமே எதிரி தான். அதனால் எனது வீட்டில் ரைடு போட்டு சோபா , சேர் செட்டுகளை காவல்துறையினர் எண்ணி செல்கின்றனர்.
நாங்கள் எங்களது ஆட்சியில் எந்த வசூலும் செய்யவில்லை கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. மிரட்டல்களுக்கு கவலைப்படுவதில்லை.

ரைடின் போது காவல் துறையினர், எம்.எல் ஏ., க்களை இழுத்து தள்ளி விடுகின்றனர். தொண்டர்களை உங்கள் சகோதரிகளை சேலையை பிடித்து தள்ளி விடுகின்றனர்.

காவல்துறைக்கு கடுமையான கண்டனம். காவல் துறையின் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன். காக்கி சட்டை போடவே முடியாது. நாங்கள் மனித உரிமை கமிஷனுக்கு செல்ல போகிறோம். திருட்டு கொள்ளை கஞ்சாவை தடுக்க போலீசுக்கு நேரம் இல்லை.

காவல்துறை எங்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். மு .க ஸ்டாலின் என்ன கடவுளா..? யாருமே இவரைப்போல் மோசமான தலைவராக இல்லை.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றியடைந்ததால் எங்கள் மீது கோபம்.கொழுசை கொடுத்து வரியை ஏற்றிவிட்டனர்.

எங்கு பார்த்தாலும் திமுக ஆட்சியில் லஞ்சம். இந்த ஆட்சி மக்களை சுரண்டும் ஆட்சி. ரூ.50,000 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியுள்ள திமுக அரசு. மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம். நீங்கள் பணத்தை வாங்கி தப்பித்து விடுவீர்களா. நாங்கள் விட்டுவிடுவோமா.

கோவை மாநகர டி .சி.சிலம்பரசன் சினிமாவில் நடிக்கும் சிலம்பரசனா..?
கட்சி பெண்கள் மீதும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீதும் கை வைக்கிறார். யார் அதிகாரம் கொடுத்தார். நாங்கள் இதை மறக்க மாட்டோம்.

சாலை போட வக்கில்லை. கலெக்டர் பொம்மை போல் உள்ளார். திமுக கோவைக்கு ஒன்னும் செய்யல. பாலம் பணி கிடப்பில் உள்ளது. மோசமான பொங்கல் பரிசு கொடுத்து வரிகளை உயர்த்தி உள்ளனர். ஜி ஸ்கொயருக்கு மட்டும் அப்ரூவல் கொடுக்கின்றனர்.

மிரட்டி அரசு நடத்துகின்றனர். உதயசந்திரன் ஐ ஏ எஸ் திமுக காரனை விட மோசமாக உள்ளார். நேர்மை போல் கொள்ளை அடிப்பதில் துணை போகிறார்.
காவல் துறை திருந்தனும்.இந்த ஆட்சி மண்ணை கவ்வும். கோட நாடு வழக்கு உட்பட பொய் வழக்கு போட காரணம் இந்த ஐ ஏ எஸ் ஆபிசர் தான்.

மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். எம். எல். ஏ பணத்தை நிறுத்தி வைத்துள்ளனர். மதுவை ஒழிக்க கொடி புடிச்சீங்க.. லேடிஸ்க்கு பார் அமைத்துள்ளீர்கள். ஆட்சி காணாமல் போய்விடும்.

ஐ டி விங்குக்கு அழுத்தம் கொடுக்காதிங்க. வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 ம் வெல்வோம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 சீட்டுக்கு மேல் வெல்வோம் என தெரிவித்தார். பல்வேறு வாக்குறுதிகளைக் திமுக அரசு சொல்லி நிறைவேற்றவில்லை. மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர்களைக் பழிவாங்கும் நடவடிக்கையில் தான் ஸ்டாலின் செயல்படுகிறார். அதற்கு உறுதுணையாக ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயசந்திரன் செயல்பட்டுகொண்டிருக்கிறார்.

தற்போது உள்ள அமைச்சர்கள் கொள்ளையடிக்கும் அனைத்து பணத்தையும் திமுக குடும்பம் வாங்கி கொள்கிறது. இதற்கும் உதயசந்திரன் தான் உறுதுணையாக இருக்கிறார்.

உதயசந்திரன் திமுக-காரர் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கொடநாடு கொலை வழக்கு விசாரணையிலும் கூட உதயசந்திரன் தூண்டுகோளில் தான் நடக்கிறது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படி நடந்து கொள்ளக்கூடாது.

அதிமுக நிர்வாகிகள் மீது எப்படி வழக்கு பதிவு செய்யலாம் என்று ஒரு ஆலோசன கூட்டமே தினமும் நடத்துகிறார்கள் என தெரிவித்தார்.

Views: - 182

0

0