திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை. மாவட்டச்செயலாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறேன். கட்சிப் பணிகளை பொறுப்போடு செய்ய வேண்டும், இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
பூத் வாரியாக கட்சியில் நியமிக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டு பேச வேண்டும். தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை, திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும். வெற்றியே நமது குறிக்கோள் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை வேகப்படுத்த வார்டு வாரியாக கூட்டங்களையும் நடத்த வேண்டும்.
வாக்குச்சாவடி குழுக்களுக்கான பணிகளை விரைவாக மேற்கொள்ளவேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியினரின் நலன் சார்ந்தும் செயலாற்ற வேண்டும்.
சுணக்கமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பணிகளை வேகப்படுத்த வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை வெகு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.