இதுக்கு ஒரு முடிவே இல்லையா? உயிர் பலி வாங்கும் நீர்நிலைகள் : காவிரி ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2022, 6:10 pm
River Dead 1 -Updatenews360
Quick Share

சேலம் : தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி கடலூர் கெடிலம் ஆற்றில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் என 8 பேர் குளிக்க சென்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களில் சிலர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றுள்ளனர். ஆனால் மீண்டும் கரைக்கு திரும்ப முடியாமல் அவர்கள் தத்தளித்தபடி அலறி கூச்சலிட்டனர்.

Junior Vikatan - 12 June 2022 - 7 பேர் உயிர் குடித்த கெடிலம் ஆறு! - “பட்ட  மரமா நிக்கிறோமே...” - கதறித் துடிக்கும் பெற்றோர் | seven death in cuddalore  Gadilam River - Vikatan

இதை கேட்டு துடித்துப்போன மக்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் மணல் கொள்ளை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதே போல நேற்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பாப்பன்பட்டி கண்மாயில் குளிக்க சென்ற இளைஞருடன் 3 சிறுவர்கள் சென்றனர். அப்போது மூன்று சிறுவர்களும் ஆழமான பகதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர்.

இதையடுத்து இளைஞர் பன்னீர்செல்வம் அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார். அதில் அந்த இளைஞர் உட்பட 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். 7 வயது சிறுவன் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் நடந்து மக்கள் இன்னும் ஆசுவாசப்படுத்தாத நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குளியை சேர்ந்த முருகேசனின் மகள் காமாச்சி மற்றும் அவரது தம்பி மக்ள் பவித்ரா ஆகியோர் சேத்துக்குளியில் உள்ள பாட்டி வீட்டிற்கு பள்ளி விடுமுறை காரணமாக வந்திருந்தனர்.

அப்போது பாட்டி பாப்பாத்தி துணி துவைக்க காவிரி ஆறுக்கு சென்றார். அவருடன் சிறுமிகளும் சென்றனர். அப்போது சிறுமிகள் ஆற்றில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி சிறுமிகள் இருவரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளின் சடலங்களை மீட்ட நிலையில் இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 523

0

0