தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது : 21 கிமீ மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..!

11 July 2021, 11:21 am
Ma Subramaniam- Updatenews360
Quick Share

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 129 வது மெய்நிகர் திரை மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து அப்போட்டியில் பங்கேற்றார்.

அதிகாலை 4.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து போட்டியில் பங்கேற்ற அமைச்சர் 21 கிமீ தொலைவுக்கு நீண்ட மாரத்தானை,மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவு இடத்தில் நிறைவு செய்தார்.இந்த போட்டியில் அவருடன் காவல்துறையினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

கொரோனா தொற்றுக்கு பிறகு 10 நாட்கள் கழித்து உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற வகையில் தினமும் 10 கிமீ ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாலும் ஓடும் பழக்கத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணி கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக எந்தவிதமான பயிற்சியும் செய்யாமல் இருந்தேன்.தற்போது கடந்த 10 நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.அதனால்,இந்த மாரத்தான் போட்டியில் 21 கிமீ ஓடியது சாத்தியமானது.

முன்னதாக திமுக ஆட்சியில் விளையாட்டு பயிற்சிகளுக்கான விழிப்புணர்வு, மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது. எனினும், தற்போது இளைஞர்கள் மேல் அக்கறை கொண்டுள்ள அரசு வந்திருப்பதால், எதிர்காலங்களில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இருக்கும்

டெங்குவின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ். ஜிகா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீக்குவதற்கு நேற்றிரவு 5 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் இனி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வராது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 101

0

0