எங்க சாவுக்கு இந்த 3 பேர்தான் காரணம் : ரயில் முன் பாய்ந்த காதலி பலி.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 5:34 pm
Lovers Suicide - Updatenews360
Quick Share

விருதுநகர் : ரயில் முன்பு விழுந்து காதலி உயிரிழந்ததை அறிந்த காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சித்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதிய கடிதத்தை வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த சோலைமீனா (வயது 20) என்பவர் விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரும் விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார் (வயது 28) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற சோலை மீனா காலை பட்டம்புத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருடைய காதலன் பிரவீன் குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், எதங்களின் தற்கொலைக்கு சோலை மீனா உடன் பணிபுரியும் புவனா, ஸ்டீபன் ராஜ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் தான் காரணம் எனக்கூறி கடிதம் எழுதிய பிரவீன் குமார் அதை தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தன் காதலி சோலை மீனா போலவே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமார் விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்

சோலை மீனா தற்கொலை செய்தது குறித்து, காதலன் பிரவீன் குமார் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உண்மை என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 719

1

0