கோவை சூலூர் அருகே நடுப்பாளையம் பிரிவில் பள்ளி மாணவனை தலையில், கத்தியால் குத்தியவன் போலீஸிடம் பிடிபட்டான். ரோந்து போலீசை பார்த்ததும் தப்பி ஓடும்போது குழியில் விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டது.
சூலூர் அருகே நடுப்பாளையம் பிரிவில் வியாழக்கிழமை இரவு டியூசன் சென்று வந்த பள்ளி மாணவன் தர்சனிடம் கத்தியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல் மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர். இதில், பள்ளி மாணவனுக்கு தலையில் வெட்டு காயம் விழுந்தது.
இது சம்பந்தமாக பாப்பம்பட்டியை சேர்ந்த அய்யப்பன்(39), தமிழ்செல்வன்(22) ஆகியோரை சனிக்கிழமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஞாயிற்றுக்கிழமை ரோந்து போலீசார் பாப்பம்பட்டி சாலையில் சென்றபோது, போலீசை பார்க்கும் ஒரு இளைஞர் ஓடி ஒளிய முற்பட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதில், அவருக்கு கை உடைந்தது. அங்கிருந்த பொது மக்கள் அவரை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை எடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது கை உடைந்த இளைஞர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கண்ணன் (22) என்ன தெரிய வந்தது. இவர், மாணவனை தலையில் வெட்டியவர் என எனவும் தெரியவந்தது. மேலும், இவர் ஏற்கனவே செல் பறிப்பு வழக்கில் கைதானவர் என்பதும் தெரிய வந்தது. கண்ணனை கைது செய்த சூலூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.