திண்டிவனம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் வழக்கறிஞர் ராம்குமார்(39). திண்டிவனம் 24 வது வார்டு கவுன்சிலரான இவர், திண்டிவனம் அடுத்த தென் பசார் கிராமத்தில் நாகாத்தம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.
திண்டிவனத்தில் குடும்பத்தாருடன் வசித்து வரும் இவர், அவ்வப்போது கோயில் அருகே உள்ள வீட்டிலும் தங்கி இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற உறவினரின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
இன்று மதியம் ராம்குமாரின் மனைவி கெஜலட்சுமி கோயில் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே மரக்கதவில் இருந்த தாழ்ப்பால் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்த போது மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், எல்இடி டிவி, பத்திரங்கள் உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.