வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை : ஃப்ரிட்ஜில் இருந்த ஜுஸ், பழங்களை சாப்பிட்டு ஆரஅமர சென்ற திருடர்கள்…!!

5 July 2021, 10:49 am
thirumangalam theft - updatenews360
Quick Share

மதுரையை அடுத்த திருமங்கலத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதியில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் ஜவகர் நகர் 5வது தெருவில் வாடகைக்கு குடியிருந்து வரும் பாஸ்கர் என்பவர் மதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசு பணியில் பணியாற்றி உள்ளார். இரவில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டினுள் இருந்த இரண்டு பீரோவை உடைத்து உள்ளே இருந்த 30 பவுன்நகை பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருமங்கலம் நகர் காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பாஸ்கர் என்பவர் இரவில் வீட்டை பூட்டி விட்டு திருமங்கலம் அருகிலுள்ள சாத்தங்குடி தனது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார்

அவர் வெளியில் செல்லும் நேரம் பார்த்து இரவு நேரத்தில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்குள்ள ஃப்ரிட்ஜில் உள்ள குளிர்பானத்தை குடித்து விட்டு பழங்களை சாப்பிட்ட பிறகு வெளியே சென்று உள்ளனர். காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து 7 பேர் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

Views: - 169

0

0