தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் வீடியோவில் வருபவர்தான் வேடன். கேரளாவை சேர்ந்த ராப் பாடகரான இவர் சமூக பிரச்சனைகளை குறித்து கூர்மையான வரிகளை போட்டு பாடி வருகிறார்.
நான் பாணன் அல்ல, பறையன் அல்ல, புலையன் அல்ல என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக பாடி வருகிறார். அவர் பாடிய முதல் ஆல்பமான Voice of the Voice Less கவனம் பெற்றது,
இதையும் படியுங்க: அண்ணாமலை அதிரடி அரசியல்.. என்னுடையது அமைதியான அரசியல் : நயினார் நாகேந்திரன் பதில்..!!
மஞ்சும்மல் பாய்ஸ், All we imagine us light போன்ற படங்களிலும் பாடியுள்ளார். இவரது பாடலுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் வேடன் அவமதிக்கிறார் என புகார் அளித்தனர்.
ஆனால் வேடனுக்கு இணையவாசிகளின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிற வருகிறது. இந்த நிலையில் வேடனுக்கு வீடியோ கால் செய்து பாராட்டியுள்ளார் திருமாவளவன்.
காரில் சென்று கொண்டே வேடனுக்கு வீடியோ கால் செய்த திருமாவளவன், வீட்டில் அனைவரும் நலமா என விசாரிக்க, தாய் தவறி 4 வருடங்கள் ஆவதாகவும், தந்தை கூலித்தொழிலாளி, அவர் வேலைக்கு செல்லாமல் இருக்க மாட்டார் என கூறுகிறார்.
பின்னர் எந்த கேரளாவில் எந்த ஊர் என கேட்க, திருச்சூர் டவுனில் இருந்து 8 கிலோ மீட்டரில் வீடு உள்ளது. நீங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும் என வேடன் அழைக்க, அடிக்கடி கேரளா வருவேன் என திருமாவும் கூறுகிறார்.
பின்னர் நாங்கள், 35 வருஷமாக பேசிக்கொண்டிருப்பதை 2 நிமிட பாடலில் சொல்லி இருக்கீங்க, நீங்கள் சொல்லக் கூடிய கருத்து புரட்சிகரமாக உள்ளது என திருமாவளவன் பாராட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.