கொரோனா தொற்றில் இருந்து குணமாகி விட்டேனா…? திருமுருகன் காந்தி அறிக்கை
6 August 2020, 7:48 pmசென்னை: கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக திருமுருகன் காந்தி கூறி உள்ளார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந் நிலையில் தாம் கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக அவர் அறிவித்துள்ளார். தமக்கு சிகிச்சையளித்து பாதுகாத்த மருத்துவர்கள், செய்தியறிந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
கொரொனோ தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன். எனக்கு சிகிச்சையளித்து பாதுகாத்த அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், தலைமை மருத்துவர் குழுவிற்கும் தொடர்ந்து என் உடல்நிலையை கண்காணித்து ஆலோசனைகள் வழங்கி பாதுகாத்த தோழர்.மருத்துவர்.எழிலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நோய்தொற்று செய்தியறிந்து தொடர்புகொண்டு ஆதரவளித்த ஐயா.வைகோ அவர்களுக்கும், தோழர்.திருமாவளவன் அவர்களுக்கும், தோழர். வேல்முருகன் அவர்களுக்கும், தோழர்.ஜவாஹிருல்லா அவர்களுக்கும் தோழர்.தெகலான்பாகவி அவர்களுக்கும், ஊடக தோழர்கள், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழமைகள் என நலம் விசாரித்த அனைத்து தோழமைகளுக்கும், சமூக வலைதளங்களின் வழி அன்பை வெளிப்படுத்திய தோழமைகளுக்கும் நன்றி என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.