காவலர் இறந்தது எதிர்பாராமல் நடந்தது : தமிழக டிஜிபி திரிபாதி!!
19 August 2020, 3:01 pmநெல்லை : காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தது எதிர்பாராதது என தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே குள்ளவாளியை பிடிக்க சென்ற போது நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியம் நேற்று உயரிழந்தார். இந்த நிலையல் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக டிஜிபி திரிபாதி நெல்லைக்கு வந்தார்.
நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் உயரிழந்த சுப்பிரமணியன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் காவலர்களுக்கும் பாதுகாப்பு உள்ளது, காவலர்கள் மூலம் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு உள்ளது என கூறினார்.
தமிழகத்தில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறுவது தவறு என சுட்டிக்காட்டிய அவர், வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் குறைந்து வருவதாகவும், காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தது எதிர்பாராதது என கூறினார்.