ஓட்டல் சர்வருடன் பயிற்சி ஆசிரியை ஓடிப் போய் திருமணம் : ஒரே வாரத்தில் ஜோடியை பிரித்த தாய்!!

28 August 2020, 10:12 am
Thirupathur Mrg- Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : பயிற்சி ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்து கோவையில் வசித்து வந்த ஜோடியை பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் பிரித்து வைத்து பெண்ணை அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மகன் அச்சுதன் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சர்வராக வேலைப்பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அஃதே பகுதியில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தை சேர்ந்த அனுராதா என்ற பெண் கணவனை இழந்து நந்தினி (வயது 21) என்ற மகளுடன் வாழ்ந்து வருகிறார். நந்தினி பிஎட், படித்து முடித்து பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அச்சுதனும், நந்தினியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு நந்தினியின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாசத்தை மறைத்த காதல் ஜோடி, கோவை வந்து ஒரு கோவிலில் திருமணம் செய்து ஒண்டிபுதூர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அறிந்த நந்தினியின் தாய் தனது உறவினர்களுடன் கோவைக்கு விரைந்து சென்று இருவரிடமும் சமாதானமாக பேசி சொந்த ஊருக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சேலம் அருகே வரும் போது அச்சுதனை தாக்கிவிட்டு அவரது காதல் மனைவி நந்தினியை அவரது பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற அர்ச்சுணன் புகார் அளித்தார்.

அதன்பேரில் மாவட்ட எஸ்பி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களின் திருமணம், பதிவு செய்யப்படாததால் பெண் வீட்டாருக்கு சாதகமாக அமையும் என்று கூறுகின்றனர். ஒரு வேளை அச்சுதனுக்கு ஆதரவாக பெண் பேசினால் இந்த விவகாரம் முடிவுக்கு வரும்.

Views: - 6

0

0