முதியவரை மிரட்டி நிலத்தை அபகரித்த திமுக எம்எல்ஏ : விரக்தியில் 80 வயது முதியவர் தீக்குளிப்பு

Author: Babu Lakshmanan
16 September 2021, 10:51 am
thirupathur suicide attempt - updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் அடியாட்களை வைத்து மிரட்டியதால் 80 வயது தக்க முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சார்ந்த சின்னராஜ் மகன் நந்தன் (80). இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சுமார் 3 சென்ட் அளவிலான இடம் இருப்பதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரான வில்வநாதன் கோயிலுக்கு இடத்தை தரவேண்டும் என 10 பேர் கொண்ட அடியாட்களை வைத்து மிரட்டி வந்தார். மேலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு வேறு இடத்தில் இடம் தருவதாக கூறி அவர் நிலத்தை அபகரித்து ஏமாற்றியும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த முதியவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தண்ணீர் தொட்டி கீழே யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்து போன போலீசார், முதியவர் நந்தன் மீது பற்றி எரிந்த தீயை அனைத்து 50 சதவீத தீக்காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சம்பவம் அறிந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் போலீஸார் விசாரிக்கையில், எம்எல்ஏ அடியாட்கள் என பாலாஜி, சிவா, செந்தில் சாமிநாதன், ராஜேந்திரன், கண்ணன், திருப்பதி, என பல பெயரை குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 3 சென்ட் நிலத்தை வேறு இடத்தில் மாற்றி தருவதாக கூறி  ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன் அடியாட்களை வைத்து மிரட்டி அபகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 421

0

0