வயிற்று வலியால் பாதித்த மகளுக்கு ஆசிரமத்தில் தொடர்ந்து பூஜை… தந்தையின் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… வசமாக சிக்கிய பூசாரி!!

Author: Babu Lakshmanan
17 February 2022, 2:28 pm
Quick Share

திருவள்ளூரில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையத்தை அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (20). இவர் பல நாட்களாக தலைவலி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், முனுசாமி என்னும் பூசாரியை அணுகியுள்ளார்.

இளம்பெண்ணின் பிரச்சனை குறித்து அறியாத அந்த பூசாரியோ, மகளுக்கு நாகதோஷம் இருப்பதாகவும், தினமும் விஷேச பூஜை செய்தால், சரி செய்து விடலாம் என்று கூறியுள்ளார். மேலும், அமாவாசை, பொளர்ணமி நாட்களில் பூஜைக்காக ஹேமாமாலினியை ஆசிரமத்திற்கு அழைத்து வரச் சொல்லியுள்ளார்.

அதன்படி, ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை என்னும் கிராமத்தில் பூசாரி முனுசாமி நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி தந்தை அழைத்து சென்றுள்ளார். இப்படியே,ஒரு வருடமாக மாணவிக்கு இவ்வகையான பூஜைகள் நடந்து வந்தது. இதனால், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் ஆசிரமத்திலேயே தங்கி விடுவதோடு, பூசாரி முனுசாமிக்கு பணிவிடைகளும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 13ம் தேதி வழக்கம் போல, பூசாரிக்கு தனது பணிவிடைகளை முடித்த மாணவி ஹேமாமாலினி, மறுநாள் காலையில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பூசாரி முனுசாமி, பெற்றோர்களை அழைத்து மாணவியை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினார். அதன்பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.

இதனையடுத்து ஆசிரமத்தில் தங்கியிருந்த போது மாணவி தற்கொலை செய்து இறந்ததால், பூசாரி முனுசாமி மீது சந்தேகம் இருப்பதாக உணர்ந்த மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, பென்னலூர் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 738

0

0