நாகதோஷம் கழிப்பதாகக் கூறி மாணவி பலாத்காரம்… சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 4:02 pm
Quick Share

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவியை நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் சாமியாரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

கொமக்கமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது மகள் கல்லூரி மாணவி ஷேம மாலினியை வௌாத்துகோட்டையில் உள்ள கோவில் ஓன்றில் நாகதோசம் கழிக்க அழைத்து சென்றுள்ளார்.

உறவினர்களுடன் இரவு அங்கேயே தங்கியிருந்த போது பூச்சிமருந்து குடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கானது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் கோவில் சாமியார் முனுசாமி திட்டமிட்டு, அப்பெண்ணை அடைய நாகதோஷம் இருப்பதாக கூறி, தன்வசப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து , அவரை தற்கொலை செய்ய தூண்டியது தெரியவந்தது.

பின்னர், சாமியார் முனுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிசிஐடி போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர் .

Views: - 389

0

1