ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றிய சிறுவர்கள்.! விசாரணையில் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

24 June 2020, 4:50 pm
Thiruvallur Bike Theft -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : ஊரடங்கில் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் நண்பர்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி பல்வேறு இடங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் போலீசார் ஊரடங்கு காரணமாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்களின் வாகனங்களைபோலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த விஜி மற்றும் அல்லி மேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இருவரும் உரிய வாகன சான்றுகள் ஏதும் இல்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவர்களை அழைத்துச் சென்று சோழவரம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பொன்னேரி மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் அல்லிமேடு பகுதியை சேர்ந்த சரவணன் செல்வம் உள்ளிட்ட நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துள்ளனர்.

சுமார் ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை 2,000ரூபாய் 3,000 ரூபாய் என சுமார் 4 லட்ச ரூபாய் வரை விற்றுள்ளனர். வாகனங்களை யாரிடம் விற்றீர்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வாகனங்களை விற்றவர்களின் விவரங்களை தெரிவித்ததை தொடர்ந்து அவர்களிடமிருந்து 12 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சரவணன் மற்றும் செல்வம் ஆகிய இருவரை விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். சிறுவர்களான விஜி, வெங்கடேசன் இருவரையும் சிறார் சீர்திருத்த பளளிக்கு அனுப்பி வைத்தனர்.