விவாகரத்து கேட்டு வந்த பெண்ணை குறிவைத்த வழக்கறிஞர் : குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாணப் படம் எடுத்து மிரட்டல்

20 July 2021, 8:59 pm
illegal affair- updatenews360
Quick Share

திருவள்ளூர் அருகே விவாகரத்துக்காக வந்த பெண்ணிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரை அவர் அணுகியுள்ளார். அப்போது, ஆவணங்களை வீட்டுக்கு கொண்டு வருமாறு கூறியதையடுத்து, அந்த பெண் மணவாளநகரில் உள்ள வீட்டிற்கு சென்ற போது குளிர்பானம் கொடுத்துள்ளார்.

அதை அருந்திய சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கியதாகவும், அப்போது தன்னை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உன்னை நிர்வாணமாக எடுத்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் எனக் கூறி அந்தப் பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். இதற்கு உடந்தையாக வழக்கறிஞர் டார்ஜனின் மனைவுியும் உடந்தையாக இருந்ததாகவும், உல்லாசத்திற்கு அழைத்து அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் அந்த இளம் பெண் திருவள்ளூர் அனைத்து மக்களிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாமணி வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், நிர்வாணமாக படம் எடுத்ததாகவும், அதை வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விவாகரத்து கேட்டு வந்த இளம் பெண்ணிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, 3 லட்சம் பணம் பெற்றதும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதுடன் உல்லாசத்திற்கு அழைத்ததாக கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவரை குடும்பத்தோடு வெட்டி கொலை செய்த சம்பவம் மறைவதற்க்குள், அடுத்த வழக்கறிஞர் குறித்த சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 231

1

0

Leave a Reply