அம்மன் கோவிலில் இருந்து வந்த அழுகுரல்.! சினிமாவை மிஞ்சிய சம்பவம்.!!

29 June 2020, 5:05 pm
Thiruvallur Infant -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : ஊருக்கு ஒதுக்குப்புறமான அம்மன் கோவிலில் கிடந்த பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த நரசமங்கலம் பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை. ஊரடங்கின் போது ஊருக்கு ஒதுக்குப்புறமான அம்மன் கோவிலின் துணியைச் சுற்றி வைத்து விட்டுவிட்டு சென்ற நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்குழந்தையை மீட்டனர்.

பின்னர் மப்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற மப்பேடு உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி வசம் குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவர்களிடம் அக்குழந்தையை ஒப்படைத்தனர்.

பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு அந்த குழந்தையை வைத்து சென்றவர்கள் யார் என மப்பேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply