திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ்.. இவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் வெளியே பயங்கர சத்தத்துடன் அவருடைய இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தீ பரவியதில் அருகில் இருந்த காரும் தீப்பற்றி கொண்டு எரிந்தது. இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர், மகிமைராஜ் வீட்டின் அருகே வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பற்றி எரிந்த வாகனங்கள் அருகே பீர் பாட்டில் போன்ற கண்ணாடி துகள்கள் இருப்பதால், பெட்ரோல் குண்டு மூலம் தாக்குதல் நடைபெற்றதா..? முன்விரோதம் காரணமாக இதை செய்தனரா..? என்ற கோணத்தில் சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
This website uses cookies.