செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை : இரும்புக்கடை ஊழியர் உள்பட 3 பேர் கைது

Author: Babu Lakshmanan
7 September 2021, 8:39 am
red sandel wood - updatenews360
Quick Share

கும்மிடிப்பூண்டியில் பழைய இரும்பு கடையில் பதுக்கி வைக்கப்பட்டருந்த 3 டன் செம்மரக்கட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனையிட்ட போது, 3 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர், பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த விஷ்வானந் என்பவரை கைது செய்த காவல் துறையினர், அவர் அளித்த தகவலின்பேரில் இம்ரான், ரவீந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்து சென்னைக்கு கடத்த இருந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் கும்மிடிப்பூண்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 307

0

0