விவேகானந்தர் பாறை to திருவள்ளுவர் சிலை படகு சவாரி : ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
Author: Babu Lakshmanan1 October 2021, 3:30 pm
கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையேயான படகு சவாரிக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது.
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகு சவாரி செய்து கண்டு ரசித்து வந்தனர். ஆனால் விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் நாட்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது வந்தது.
இதனால் பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. முதல்வரின் இத்திட்டத்தை வரவேற்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் சுற்றுலா பயணிகளிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் தாமரை பாரதி தலைமையில் அக்கட்சியினர் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
0
0