திருவண்ணாமலை தீபத்திருவிழா : பக்தர்கள் கிரிவலம் செல்ல, கோவிலுக்கு வரத் தடை!!

13 November 2020, 1:02 pm
Tiruvannamalai Deepam - Updatenews360
Quick Share

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத்தன்று பக்தர்கள் கோவிலுக்கு வரவும் கிரிவலம் செல்லவும் ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 20ஆம் கொடியேற்றத்துடன துவங்குகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒரு நாளுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் என ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

தீபத் திருவிழாவுக்கு வெளிமாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முக்கிய நாளான 9வது நாள், அதாவது வரும் 29ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

பின்னர் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்களின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த மகா ரதம் என்று அழைக்கக்கூடிய பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகா தீபத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்லவும், கோவிலுக்கு வரவும் ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார். பத்துநாட்கள் திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Views: - 31

0

0