சாலையில் தாறுமாறாக ஓடிய கார்… குளத்தில் பாய்ந்து விபத்து ; குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
Author: Babu Lakshmanan31 அக்டோபர் 2022, 6:47 மணி
திருவாரூர் :திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் விழுந்ததால் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விசலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காரில் ஐந்து பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த, குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு பெண் மட்டும் காப்பாற்றப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வந்ததா..? திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வந்ததா..? என குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. சத்தம் கேட்கவே அருகில் இருந்தவர்கள் ஓடி காப்பாற்றி உள்ளனர் .
இந்த சம்பவத்தை தொடர்ந்து, விபத்தில் சிக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
0
0