திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுமாப்பிள்ளை இடி விழுந்து பலி ; வயலுக்கு சென்ற போது தந்தையும் உயிரிழந்த சோகம்…!!

Author: Babu Lakshmanan
26 செப்டம்பர் 2022, 1:00 மணி
Quick Share

மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் இடி விழுந்து தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை காலனி பகுதியை சேர்ந்த அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் இருவரும் நேற்று நள்ளிரவு அவர்களுக்கு சொந்தமான வயலில் மழையால் தேங்கி நிற்கும் நீரை வடிய வைப்பதற்காக சென்றனர்.

மகன் அருள் முருகன் வயலில் தண்ணீரை வடியவைத்த போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியது. அப்போது, அவரது தந்தை அன்பரசு அருகில் நின்றதால், அவர் மீதும் மின்னல் தாக்கி, தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை வயலுக்கு வேலை சென்றவர்கள் வயலில் இருவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் போலீசார் மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த அருள் முருகனுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், மின்னல் தாக்கி தந்தையுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் தளிக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • DMK joins TVK தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!
  • Views: - 843

    5

    5