‘நான் சினிமாவை கைவிட இதுதான் காரணம்’…விரக்தியில் தான் இந்த முடிவு எடுத்தேன்: அமெரிக்காவில் செட்டிலான பிரபல நடிகரின் பின்னணி..!!

Author: Rajesh
15 April 2022, 2:05 pm
Quick Share

தமிழ் சினிமாவின் கம்பீரமான தோற்றமுடைய நடிகர்களில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்கள் பலர் இருந்தனர். அவர்களில் மிக முக்கிய பங்கினை அளித்தவர் நடிகர் நெப்போலியன். புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் 1991ல் அறிமுகமாகியவர் நடிகர் நெப்போலியன். ஆஜானுபாகு தோற்றத்தில் கிடைக்கும் ரோல்களில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதினை ஈர்த்து வந்த நெப்போலியன் மற்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் எஜமான், கமல்ஹாசனின் விருமாண்டி போன்ற படங்களில் முரட்டு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு சென்றது முதல் பிரேக் எடுத்துக்கொண்டு பல ஆண்டுகள் கழித்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் அமெரிக்காவிற்கு சென்று செட்டிலாகியது எதற்கு என்ற பதிலை கொடுத்துள்ளார். சினிமாவில் இருக்கும் போது என் பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தார்கள். போகபோக அவர்கள் வளர அவர்களின் டீன் ஏஜ் வயதில் கூட இருந்து கவனிப்பது பெற்றோர்களின் கடமையாக இருக்கும்.

தாயிற்சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தாயின் அரவணைப்பு தந்தையின் வழிக்காட்டுதல் தான் பிள்ளைகளை நல் வழிப்படுத்தும். அதற்காகத் தான் நான் அமெரிக்காவிற்கு சென்றேன். இது போன்று என்னை போன்ற பெற்றோர்களின் கடமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Views: - 600

0

0