‘திராவிடம் தெரியாத கோமாளிகளுக்கு இந்த திட்டமே சாட்சி‘ : இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 7:27 pm
Stalin CM -Updatenews360
Quick Share

விழுப்புரம் : திரவிடம் தெரியாத கோமாளிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டமே சாட்டி என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறையால் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பள்ளி முடிந்த பிறகு மாலையில் ஒரு மணிநேரம் தொடக்க, நடுநிலைப் பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் அனுபவத்தை உண்டாக்கும் பணி நடைபெறும்.

மேலும், இத்திட்டமானது மாணவ, மாணவியர்களின் வசிப்பிடம் அருகே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றல் வாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்கிறது.

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க தன்னார்வலர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப் போலவே, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

“இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் அடிப்படையில், இக்கல்வியாண்டில் 6 மாத காலத்திற்கு, வாரத்திற்கு 6 மணிநேரம் தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாகப் பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
“இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக் குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்படவுள்ளன.

இல்லம் தேடி கல்வித் திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி புகட்டும். திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசிவருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் தான் திராவிடம்.

நேரடி வகுப்புகள் தரும் பயனை ஆன்லைன் கல்வி தராது. மாநில சுயாட்சி மத நல்லிணக்கம் போன்ற பல செயல்களை செய்துவரும் நிலையில் தான் இல்லம் தேடி கல்வி திட்டங்களையும் கொண்டு வருகிறோம்

ஒரு காலத்தில் இன்னார் தான் படிக்க வேண்டும் இன்னார் படிக்கக் கூடாது என்ற நிலையை மாற்றிய ஆட்சி திராவிட ஆட்சி. ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் மற்றும் பட்டியல் இன பழங்குடி இன மக்களுக்கு பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.

Views: - 176

0

0