அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.!!

Author: Poorni
14 October 2020, 8:03 am
Quick Share

கோவை: குளத்துப்பாளையம் பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2018 -19 மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கொளத்துப்பாளையம் பொதுவிநியோக கடையின் கட்டிடத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.

தாளியூர் பகுதியில் பொதுமக்களுடன் சேர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் கபசுர குடிநீர் குடித்தார் களிக்க நாயக்கன் பாளையத்தில் கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அதே பகுதியில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டும் பணிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் பூமிபூஜை துவக்கி வைக்கப்பட்டது. கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் 9 பேருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் வழங்கினார்.

Views: - 43

0

0