வக்கீல் பதவியை ராஜினாமா செய்யாத திமுக வேட்பாளர்: தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டில் வேட்பு மனு நிறுத்தி வைப்பு..!!

Author: Rajesh
5 February 2022, 3:32 pm

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டு தி.மு.க வேட்பாளர் மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60வது வார்டு தி.மு.க வேட்பாளராக பாலகுருசாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்று, மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

அப்போது பாலகுருசாமி மாநகராட்சியில் வக்கீலாக இருப்பதாகவும் அந்த பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று அ.தி.மு.க தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், அவரிடம் விளக்கம் கேட்டு மனுவை நிறுத்தி வைத்துள்ளார்.

ராமச்சந்திரனின் வேட்பு மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது பரிசீலனைக்கு பிறகு தெரியவரும் என கூறப்படுகிறது.

  • Vetrimaaran shares Viduthalai 2 experience இதுக்குப் பிறகு இப்படியொரு படம் பண்ண முடியுமானு தெரில.. வெற்றிமாறன் அப்செட்!