தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே மரத்தடி நிழலில் படுத்து தூங்கி கொண்டிருந்தவரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கீழுரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மணி (60). இவர் கூலி தொழில் செய்து கொண்டு அவ்வப்போது ஆடு மேய்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் 4 மகள்கள் உள்னனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில், இன்று மணக்கரை ஊருக்கு கீழ்புறம் உள்ள மாடசாமி கோவில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, அருகில் இருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அந்த சமயத்தில், அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மழை வரும் என்பதை அறிந்து தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் மணி அயர்ந்து தூங்கியுள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென அங்கு இரண்டு பைக்குகளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் தூங்கி கொண்டிருந்த மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் அதிகமாக வெட்டு விழுந்துள்ளது. அதன்பின்னர், அந்த வழியாக வந்த நபர் சத்தமிடமே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். அதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இறந்தவர் உடலை பெற்றுக் கொள்வோம் என்று ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மரத்தடி நிழலில் படுத்து தூங்கி கொண்டிருந்த ஆடு மேய்க்கும், தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.