சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புதிதாக 27 காவலர்கள் நியமனம்..!

29 June 2020, 7:34 pm
police - updatenews360
Quick Share

தந்தை, மகன் உயிரிழந்ததை தொடர்ந்து, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புதிதாக 27 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் மதுரை உயர்நீதிமன்ற கிளை, சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளராக பெர்னார்டு சேவியர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். பின்னர், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 27 பேரை புதிதாக நியமனம் செய்து காவல்துறை எஸ்.பி. உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply