தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் நெஸ்டன் மனைவி மடோனா (40), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 7 அண்டுளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது, தாயார் ரோசிட்டா என்பவருடன் வசித்து வருகிறார். நேற்று காலை 9 மணியளவில் மடோனா தனது தாயாரை அடித்து துன்புறுத்தி வீட்டிற்குள் அடைத்து வைத்துக் கொண்டு, மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அவரது தாயார் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், மடோனா சமாதானம் அடையாமல் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்த போது, கதவை உடைத்தால் கேஸ் பற்ற வைத்து விடுவேன் என அப்பெண் கூறினார். பின்னர், தீயணைப்பு துறையினரின் சூட்சகமாக லாவகமாக தாய் – மகளை மீட்டனர்.
மேலும், மடோனாவை மனநல காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.