உணவு பொருட்களை கையாளும் பணியில் உள்ளவர்கள் கட்டாயம் கையுறை அணிய வேண்டும் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2021, 7:21 pm
Food Gloves -Updatenews360
Quick Share

உணவு பொருட்களை கையாளும் பணியில் உள்ளவர்கள் கையுறை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவு விநியோகம் செய்வோர், பார்சல் பேப்பர்கள், கவர்களை பிரிக்க எச்சில் தொட்டு பயன்படுத்துவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும், வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Views: - 194

0

0