அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள் : ஓபிஎஸ்சை விமர்சித்த முன்னாள் அமைச்சர் காமராஜ்!!
Author: Udayachandran RadhaKrishnan22 ஜூலை 2022, 9:20 காலை
இயக்கத்தை விட்டு சென்றவர்கள். இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள் என முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
தஞ்சையில் உள்ள செங்கோ மகாவில் திமுக அரசை கண்டித்து வருகிற 25ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய காமராஜ். இயக்கத்தை விட்டு சென்றவர்கள், இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்கள் என்றார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
எடப்பாடியார் பொதுச்செயலாளராக ஏற்று உள்ள நாம்தான் உண்மையான அதிமுக என கூறினார். மேலும் தஞ்சையில் வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
Views: - 1685
3
1