பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.
இந்த கடைகளை திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் கடைக்குத் தகுந்தார் போல் ரூபாய் 100 முதல் 200 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதே போல செவ்வாய்க்கிழமை கடைகள் அமைத்து வியாபாரம் நடைபெற்று வந்த போது வயதான மூதாட்டி ஒருவர் சிறிய தட்டுகளில் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அங்கு வந்த குத்தகைதாரரும் ஆனைமலை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சந்தோஷ்குமார் என்பவர் இங்கெல்லாம் கடை போடக்கூடாது என அந்த மூதாட்டி இடம் ஓசியில கடை போடுவியா? என பணம் கேட்டு வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் திட்டி கடையை எடுக்குமாறும் மேலும் மிளகாய் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை தூக்கி எரிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
செய்வதறியாத அந்த மூதாட்டி அழுது புலம்பியுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் தெருவோர வியாபாரி முறைப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் மாநில அரசின் விதிகளின் கீழ் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.