செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்: பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை…குமரியில் பரபரப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 11:09 am
Quick Share

கன்னியாகுமரி: செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து கேரள இளைஞர் மிரட்டிய விவகாரத்தில் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவரது மகள் ஆதிரா. இவர் அப்பகுதியில் உள்ள கலை கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆதிராவின் தாயார் மீனா வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஆதிரா பளுகலில் அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆதிரா தரப்பில் கடந்த மாதம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் வாட்ஸப்பில் பழகி தன்னை காதலிப்பதாக கூறி ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும், பின்னர் அந்த ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் வேண்டும் எனவும் இதற்கு அந்த இளைஞரின் குடும்பத்தினரும் உடந்தை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி மாணவி ஆதிரா நேற்று வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் ஆதிராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஆதிராவின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் வந்த பின்னரே துரித விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Views: - 484

0

0