ஆபாச வார்த்தைகளால் அலங்கரித்து யூடியூபரை செருப்பால் அடித்த டிக்டாக் பிரபலம் : வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2021, 4:42 pm
tik Tok Fame Attack - Updatenews360
Quick Share

மதுரை : மதுரையை சேர்ந்த யூடியுபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மதுரை சுப்ரமணியபுரம் மரா்க்கெட் பகுதியில் வசிக்க கூடிய யூடியுப்பரான சிக்கா என்ற சிக்கந்தர் கடந்த 2ஆம் தேதி வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி என்பவர் தனது ஆண் நண்பருடன் வந்தார்.

அப்போது சிக்கந்தரை செருப்பால் தாக்கி் அதனை வீடியோவாக பதிவுசெய்து அதனை தங்களது யூடியூப் பக்கங்களில் பதிவேற்றம் செய்ததாக, கடந்த இரு தினங்களாக சிக்கந்தர் மற்றும் சூர்யாதேவி இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், சூர்யாதேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சிக்கந்தர் நேற்று மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு சூர்யாதேவியுடன் வந்த ஆண் நண்பரை தேடிவருகின்றனர்.

இதனிடையே சிக்கந்தரும், சூர்யாதேவியும், செருப்பால் மாறி மாறி தாக்கிகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் இது போன்ற ஆபாச பேச்சுகள் , வீடியோக்களை பதிவிடும் நபர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 663

0

0