திருச்செந்தூர் முருகனை வழிபட 6ஆம் தேதி முதல் புதிய விதி : கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு!!

3 September 2020, 4:24 pm
Tiruchendhur Temple - Updatenews360
Quick Share

திருச்செந்தூர் : அறுபடை வீட்டில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடான முருகன் சன்னிதானத்தில் புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணயின் கோவில். கொரோனா பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள் வழிபட தேடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின்‌ உத்தரவின்படியும்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகள் படி கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளும் வழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் www.tnhree.gov.in என்ற வலைதள முகவரியில் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும், நாளை (04.09.2020) முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கான அனுமதிச் சீட்டு (Print out) முன்பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், திருவிழா நீங்கலாக இடைப்பட்ட தரிசன நேரங்களில் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 தொற்று பரவாமல்‌ தடுக்கும்‌ பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள்‌ அனைவரும்‌ கண்டிப்பாக உடல்‌ வெப்ப பரிசோதனை செய்தும்‌, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம்‌ செய்த பின்பே திருக்கோயிலுக்குள்‌ அனுமதிக்கப்படுவார்கள்‌. அதே போல பக்தர்கள்‌ அனைவரும்‌ அரசால்‌ அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறையின்படி உரிய சமூக இடைவெளியினை
கோவிலுக்குள்ளும், சுவாமி தரிசன வரிசை முறையிலும்‌ கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்‌, கர்ப்பிணிப்‌ பெண்கள்‌, 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் (Comorbidities) திருக்கோமிலுக்கு வராமல்‌, வீட்டிலேயே இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரதான சன்னதிகளான சுப்பிரமணியன் மற்றும் சண்முகர் சன்னதி மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பூஜைப் பொருட்களை கொண்டு வர அனுமதியில்லை, கடற்கரையில் நீராட தடை, நாழிக் கிணற்றில் தீர்த்தம் தெளித்தல் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் மூலம் வழங்கப்படும் மதிய அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 10

0

0