திருப்பதியை மட்டுமல்ல, எம்பியையும் விடாத கொரோனா…! சென்னை மருத்துவமனையில் அட்மிட்

14 August 2020, 9:53 am
corona Cbe -Updatnews360
Quick Share

சென்னை: திருப்பதி தொகுதி எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டி இருக்கிறது.

பொதுமக்கள் தவிர, அரசியல் பிரமுகர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா முதற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரை கொரோனா பாதித்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில் திருப்பதி எம்பிக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. பல்லிதுர்கா பிரசாத் ராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும். அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பதியில் தேவஸ்தான ஊழியர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலனவர்கள் குணம் பெற்றாலும் அர்ச்சகர்கள் சிலர் உயிரிழந்தும் இருக்கின்றனர். இப்போது திருப்பதி எம்பிக்கு கொரோனா உறுதியாக உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0