திரும்பும் திசையெல்லாம் உறைபனியாக மாறிய திருப்பூர்!! கடும்பனிப்பொழிவில் மூடிய மாநகரம்!!

19 November 2020, 10:31 am
Tirupur Fog - Updatenews360
Quick Share

திருப்பூர் : கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் மாநகர் முழுவதும் பரவிய மூடுபனி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருப்பூரில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளுமையான கால சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. எதிரே வரும் ஆட்கள், வாகனங்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியது.

மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மூடுபனியானது சூழ்ந்து காணப்பட்டது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக கடுமையாட வெயில் வாட்டி வந்த நிலையில், குளுமையான சூழல் ஏற்பட்டு, பனிப்பொழிந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 16

0

0