திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் அளித்த சம்பவம் : மேலும் 2 பேர் கைது!!

Author: Udayachandran
3 October 2020, 5:12 pm
Tirupur Harrasement - updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடத்தில் அசாம் மாநிலத்தை சேர்நத் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள கள்ளிமேடு பகுதியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் முட்புதர் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனை தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மூன்று பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமார், தாமோதரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளந்தமிழனை பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 45

0

0