திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கருவலுரை சேர்ந்த ஒரு நபர் வில்லங்கச் சான்று பெற வந்துள்ளார். அந்த நபரிடம் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் பணிபுரியும் தலைமை எழுத்தர் தனபால் என்பவர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தலைமை எழுத்தர் தனபால் வீடியோ எடுத்த அந்த நபரிடம் வில்லங்க சான்று பெற ரூ. 121 கட்டணம் செலவு ஆகும் என்று கூறுகிறார். எதிரில் உள்ள நபர் வேறு ஏதும் உங்களுக்கு கட்டணம் உள்ளதா என்று கேட்கிறார். அதற்கு உதவியாளர் தனபால் பத்தாயிரம் ரூபாய் பணம் செலவாகும். அதுபோக அந்த வில்லங்கம் சான்று பெற வந்தவரிடம் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்னென்ன செலவு இருக்கிறது என்று கணக்கும் கூறுகிறார்.
மேலும், சாதாரணமாக ஒரு வில்லங்க சான்றுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும் 20 பேப்பர் என்பதால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அதற்கு மேல் செலவாகலாம் என்று கூறுகிறார். வில்லங்கம் பேறும் சேவைக்கு அரசு தரப்பில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லஞ்சம் கேட்கும் உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.