திருப்பூர் அருகே பசுக் கன்றை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் பகுதி கூனம்புத்தூரை சேர்ந்தவர் விவசாயி துரைசாமி வயது 71. இவர் அப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சுமார் இரவு 7:30 மணியளவில் துரைசாமி வீட்டின் பின்புறம் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.
சுமார் 8 மணி அளவில் வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த பசு கன்று குட்டி கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட்டை வைத்து கன்று குட்டியை தேடி உள்ளார். வழக்கமாக கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து கன்று காணாமல் போயிருந்ததை கண்டு, வீடு மற்றும் வீட்டின் பின்புற பகுதியில் தேடி உள்ளார்.
அப்பொழுது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பசு கன்று குட்டியை இழுத்துச் சென்று அதை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனை கண்ட துரைசாமி சத்தம் போட்டு உள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரைக் கொண்டு பசுக் கன்று குட்டியை பரிசோதித்ததில் அது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இதுபோன்று குற்ற செயல்கள் நடப்பது இன்றுடன் மூன்றாவது முறை என்றும் பசுவின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஊதியூர் காவல் நிலையத்தில் கன்று குட்டியின் உரிமையாளர் துரைசாமி, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே பசுக் கன்றுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.