அதிமுக முன்னாள் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் காலமானார்!!

30 August 2020, 3:07 pm
Admk Former MLA - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யாசாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் தாராபுரம் ஆர். அய்யாச்சாமி கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் .ஜி ராமச்சந்திரன் ஆட்சியின் போது அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தவர்.

இவர்உயர் ரத்த அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 29ஆம் தேதி நேற்று இரவு 10 மணி அளவில் கோவை தனியார் மருத்துவமனையில் அய்யாசாமியின் உயிர் பிரிந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது உடலை தாராபுரம் பொள்ளாச்சி சாலை பாலசுப்பிரமணியம் நகர் அருகே உள்ள பெரியார் நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணியளவில் தாராபுரம்நகராட்சி எரிவாயு தகன மேடையில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தகவல் கூறினர்.

உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் தேவராஜ், பாஸ்கரன், ரவி ,என்ற மகன்களும் ரங்கநாயகி என்ற பெண்ணும் உள்ளனர். காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யாச்சாமி 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார்.

இதற்குப்பின் திமுக மீண்டும் அதிமுக கட்சிகளில் இணைந்து முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார் இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட உடல் நலிவு காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் சிகிச்சையில் கவனம் செலுத்தினார்.

மறைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் உடலுக்கு அதிமுக, திமுக கட்சிகளைச் சார்ந்த தாராபுரம் நகர ஒன்றிய பிரமுகர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Views: - 41

0

0