தலைமை மருத்துவருக்கு கொரோனா.! திருப்பூரில் எலும்பு முறிவு மருத்துவமனை மூடல்!!
27 August 2020, 2:38 pmதிருப்பூர் : தாராபுரத்தில் தலைமை மருத்துவருக்கு கொரோனா தொற்று காரணமாக எலும்பு முறிவு தனியார் மருத்துவமனை மூடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவரின் தந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர்.மேலும் நகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில் தனியார் மருத்துவமனைக்கு தடுப்புகள் வைத்து சீல் வைக்கப்பட்டது.